000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சங்கர நாராயணன் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a திருமாலும் சிவனும் நிற்கும் காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. பிற்காலங்களில் ஹரியும் சிவனும் இணைந்த உருவம் சிற்பங்களில் காட்டப்படுகிறது. சிவ வடிவங்களில் ஒன்றாக சங்கர நாராயணன் உருவம் கருதப்படுகிறது. வலது பாதி சிவனாகவும், இடது பாதி திருமாலாகவும் காட்டப்பட்டுள்ளனர். வலது பாதியில் சிவனுக்குரிய சடை மகுடம், கையில் மழு, இடையில் அரையாடை (தோலாடை) ஆகியனவும், இடது பாதியில கிரீட மகுடம், காதில் மகர குண்டலம், நீண்ட பட்டாடை, கையில் சங்கு ஆகியனவும் இடம் பெற்றுள்ளன. இடது காலை நன்கு ஊன்றி, வலது காலை சற்று தள்ளி பக்கவாட்டில் வைத்திருக்கும் அர்த்த வைதஸ்திக நிலையில் சங்கர நாராயணர் நின்றுள்ளார். சிவனின் வலது முன் கை அபய (காக்கும்) முத்திரை காட்டுகிறது. திருமாலின் இடது முன் கை தொடையில் ஊரு முத்திரையாக அமைந்துள்ளது. இருபுறமும் இடைக்கட்டின் முடிச்சுகள் நீண்டு கணுக்கால் வரை தொங்குகின்றன. அணிகலன்கள் உடலின் இரு பாதியிலும் அவரவர்க்குரியதாக காட்டப்பட்டுள்ளன. |
653 | : | _ _ |a சங்கர நாராயணன், ஹரிஹரன், மாலொரு பாகர், அரியர்த்தர், கேசவார்த்த மூர்த்தி, சிவவிஷ்ணு, ஹரியும் சிவனும், கொடும்பாளுர் மூவர் கோயில், புதுக்கோட்டை, பூதி விக்கிரமகேசரி, இருக்குவேள், இருக்குவேளிர், இருக்குவேளிர் கோயில் சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கொடும்பாளுர் மூவர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கொடும்பாளுர் |d புதுக்கோட்டை |f விராலிமலை |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
914 | : | _ _ |a 10.5421455 |
915 | : | _ _ |a 78.51921402 |
995 | : | _ _ |a TVA_SCL_000188 |
barcode | : | TVA_SCL_000188 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |